• TRENDING | பர பர

இன்ஸ்டாவில் ஜோதிகா: அரை மணியில் 13 லட்சம் பாலோயர்கள்!





நடிகை ஜோதிகை முதன்முறையாக, இன்ஸ்டாகிராம் வந்த நிலையில், அரை மணி நேரத்தில் 13 லட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிக்காமல் இருந்தார். பிறகு `36 வயதினிலே` படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், இப்போது `உடன்பிறப்பே` என்ற படத்தில் நடித்துள்ளார். இரா. சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சூரி உட்பட பலர் நடித்துள்ளார். இந்தப் படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இதுவரை சமூகவலைதளங்களின் பக்கம் தலைகாட்டாமல் இருந்த நடிகை ஜோதிகா, இப்போது முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தன் முதல் பதிவில் இதைத் தெரிவித்துள்ள ஜோதிகா, ஊரடங்கில் நடந்த பல விஷயங்களை தெரிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் இன்ஸ்டாவில் வந்த அரைமணிக்குள் 13 லட்சம் பாலோயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளார்.

ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதற்கு அவரது கணவரும் நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். `என் மனைவி வலிமையானவர். முதன்முறையாக இன்ஸ்டாவில் உன்னை பார்ப்பது த்ரில்லாக இருக்கிறது` எனத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் வந்துள்ள ஜோதிகாவை வரவேற்றுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :