• JUST IN | சுட சுட

மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை: தமிழக அரசு!





தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் (செப்டம்பர் 1) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று கட்டாயமில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிகள் நாளை திறப்பது தொடர்பாக நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்படவில்லை. இந்நிலையில் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது.சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகவும் அமையும். அனைத்து மாணவர்களும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளைக் கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்.

-இவ்வாறு அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :