• JUST IN | சுட சுட

தமிழகத்தில் விநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை: அரசு அறிவிப்பு!





தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்டம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழநாட்டில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கோ தடை விதிக்கப் படுகிறது.

எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சென்னைக் கடற்கரையில் சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை ஊர்வலத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 வரை தமிழ்நாட்டில் அனைத்து மத விழாக்களுக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப் படுகிறது.

-இவ்வாறு தமிழக அரசு அறிக்கை வெளீயிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :