• JUST IN | சுட சுட

#BREAKING: புதுச்சேரி சபாநாயகருக்கு நெஞ்சுவலி: ஐசியூவில் அனுமதி!





புதுச்சேரி சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த சபாநாயகருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு தலைமை மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று 4-ம் நாள் நிகழ்வுகளில் பங்கேற்ற சபாநாயகர் செல்வம் இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார். ஆனால், பேரவைக்குள் வராமல் கார் வெளியேறியது. அதனால், சட்டப்பேரவை நிகழ்வுகள் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் தொடங்கியது.

பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதையடுத்து ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சபாநாயகர் செல்வத்தின் தரப்பில் சொல்லப்பட்டதாவது:

சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்தபோது, திடீரென அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல் நிலையைப் பொறுத்து மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம்.

-இவ்வாறூ தகவல் தெரிவிக்கப் பட்டது.

சபாநாயகர் செல்வம் ஐசியூவில் உள்ள சூழலில் யாரையும் அங்கு அனுமதிக்கவில்லை. சபைக் காவலர்களே மருத்துவமனை ஐசியூ வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :