• தினம் ஒரு ஸ்வீட்

ராகி ரசமலாய்


ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

தேவையானவை:

கேழ்வரகு மாவு - 200 கிராம்,

துருவிய பன்னீர் - 100 கிராம்,

சமையல் சோடா - ஒரு சிட்டிகை,

நாட்டு சக்கரை - 50 கிராம்,

பால் - 1லிட்டர்,

சர்க்கரை - கால் கிலோ,

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,

துருவிய பாதம், பொடியா உடைத்த முந்திரி, சாரை பருப்பு, பிஸ்தா பருப்பு – தலா 2 டீஸ்பூன்,

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை,

நெய், தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, பன்னீர், நாட்டு சர்க்கரை, சோடா உப்பு அனைத்தையும் போட்டு நன்கு கலந்து விடவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். அரை மணி கழித்து குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து நெய் தடவி, கரைத்து வைத்த மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு வேகவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் அடிக்கடி கிண்டி விட்டு 600 ml ஆகும்வரை வைத்திருக்கவும். பின் அதில் சர்க்கரை (அவரவர் தேவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ) சேர்க்கவும். சர்க்கரை முழுதும் கரைந்து கொதிக்கும்போது, குங்குமப்பூ, ஏலக்காய் பவுடர் மற்றும் பருப்பு வகைகளை சேர்க்கவும்.

பிறகு அதில் சுட்டுவைத்த ராகி பணியாரங்களை பாலில் நன்கு மூழ்கி இருக்குமாறு போட்டுவிட்டு அடுப்பை அணைக்கவும். நான்கு மணி நேரம் கழித்து பிரிட்ஜில் எடுத்து வைக்கவும். 1 மணி நேரத்திற்குப் பின் எடுத்து ரசித்து, சுவைத்து சாப்பிடவும். நன்கு மென்று சாப்பிட சுவையோ சுவை... சத்துக்களும் அதிகம்

Comments

VaniGanapathy says :

புது விதமான ரச மலாய்,

Kavitha says :

Very nice

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :