• TRENDING | பர பர

அந்தரத்தில் தொங்கிய கர்ப்பிணி பூனை: காப்பாற்றிய 4 பேருக்கு துபாய் மன்னர் பரிசு!





துபாயில் அடுக்குமாடி குடியிருப்பிலில் மாடியிலிருந்து சாலையில் விழ இருந்த கர்ப்பிணி பூனையை, லாவகமாக காப்பாற் றிய இந்தியர்கள் உள்பட 4 பேருக்கு துபாய் மன்னர் பரிசு கொடுத்து பாராட்டி இருக்கிறார்.

துபாயில் உள்ள டெய்ரா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2-வது மாடியின் ஓரத்தில் கர்ப்பிணி பூனை ஒன்று அபாயகரமாக தொங்கிக் கொண்டிருந்தது. மேலேற வழி தெரியாமல் திணறியபடி தவித்த அந்த பூனையைக் கண்ட அந்தப் பகுதி யை சேர்ந்த 4 பேர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். ஒரு போர்வையை எடுத்து வந்த நான்குபேரும் அதை விரித்துப் பிடித்துக்கொண்டனர். பின்னர் பூனையை மேலிருந்து அதில் குதிக்கும்படி செய்தனர். பூனை மிகச் சரியாக அந்த போர்வையில் விழுந்தது. இதையடுத்து அவர்கள் அந்தப் பூனையை பத்திரமாக தரையில் இறக்கிவிட்டனர். அது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல பார்த்துவிட்டு சென்றது. இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, வைரலாகியது.

இதையடுத்து அந்த இளைஞர்களின் மனித நேயம் சமூக வலை தளங்களில் பாராட்டைப் பெற்றது. அந்த 4 இளைஞர்களூக்கும் துபாய் மன்னர் பரிசளித்துப் பாராட்டியிருக்கிறார்.

Twitter : https://twitter.com/i/status/1430226730195820544

Comments

Bhamathy narayanan says :

மனித நேயம் எல்லா உயிர்களிடத்தும் ஒன்றுதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய செயல்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :