• JUST IN | சுட சுட

பண்டிகை நேர கூட்ட நெரிசல்களை தவிருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!





பண்டிகைகள் காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பியுள்ள அறிவிப்பு:

நாடு முழுவதும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைககள் அடுத்த சில மாதங்களில் வர உள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் தேசிய அளவில் கட்டுக்குள் இருந்தாலும் சில மாநிலங்களில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை. எனவே கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாக அமலாக்க வேண்டும்.

-இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :