• JUST IN | சுட சுட

அமெரிக்காவில் கரையை கடந்தது `இடா` புயல்!





அமெரிக்காவை அச்சுறுத்திய 4-ம் நிலைப் புயலான `இடா` புயல், லூசியானா மாநிலத்தில் நேற்று இரவு கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 230 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

-இதுகுறித்து லூசியானா மாகாண கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கை:

`கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் `கத்ரினா` என்ற புயல் தாக்கியபோது நகரில் 80 சதவீதப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது; 1,800க்கும் அதிகமானோர் பலியாகினர். அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, இடா புயலைக் கையாண்டோம். அதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் இடா புயல் கடந்த, 150 ஆண்டுகளில் லூசியானா காணாத மோசமான புயலாக இருந்தது

-இவ்வாறு அந்த மாநில கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்கூட்டியே புயல் எச்சரிக்கை விடப்பட்டதால், அதிக பாதிப்புள்ள பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதனால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது. இருந்தும் புயல் காற்றால் மரங்கள் உடைந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. புயலால் ஏற்பட்ட முழு சேத விவரம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புயலால் கியூபாவும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :