• JUST IN | சுட சுட

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 42,909 பேருக்கு தொற்று!





இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 42,909 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டில் புதிதாக 42,909 பேருக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,763 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந் துள்ளனர். இதுவரை 3,19,23,405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது நாடு முழுவதும் 3,76,324 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவால் இன்று 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோ னாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,210 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோ னாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.51 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.34 ஆகவும் உள்ளது.

நாடு முழுவதும் நேற்று மட்டும் 31,14,696 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளன. இதுவரை 63,43,81,358 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பரவல் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

-இவ்வாறூ மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :