• JUST IN | சுட சுட

சிசிடிவி கேமரா கண்காணிப்பு: உலக அளவில் டெல்லி முதலிடம்! சென்னை 3-வது!





நாட்டின் பல பகுதிகளில் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் சம்பவங்களால் குற்றவாளிகளை அடையாளம் காண முடிகிறது.

அந்த வகையில், உலகளவில் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 20 நகரங்களின் பட்டியலை `ஃபோர்ப்ஸ் இந்தியா` வெளியிட்டுள்ளது. ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகபட்ச கேமராக்களை அடிப்படையாகக் கொண்டு, உலக அளவில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

`ஃபோர்ப்ஸ் இந்தியா` ஊடகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக இந்தியாவில் டில்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு, ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன.அடுத்ததாக, சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் சென்னை 3-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில், சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளன. அந்த வகையில், 194 கேமராக்களுடன் நியூயார்க் 14-வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18-வது இடத்திலும் உள்ளன.

இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியதில் ஷாங்காய், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களை டெல்லி பின்னுக்கு தள்ளியிருப்பது பெருமையளிக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் இதை சாதித்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாராட்டுகள்.

-இவ்வாறு தன் டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :