• JUST IN | சுட சுட

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா: மத்திய அரசு கவலை!





கேரளாவில் கொரோனா பரவல் வேகம் எடுத்ததையடுத்து அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையில், அம்மாநில தலைமைச் செயலருக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியாவிலேயே கேரளாவில் கொரோனா மிகவும் உச்சத்தில் இருப்பது கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை தொடர்பாக தளர்வுகளை அறிவித்ததையடுத்து அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறீப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :