• JUST IN | சுட சுட

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம்! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!





தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்ககளுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

இது குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப் பட்டவை! அதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் தமிழக அரசு அச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

-இவ்வாறு அவர் கூறீனார். சட்டமன்றத்திலிருந்து பாஜக வெளியேறியதையடுத்து அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக-வும் வெளிநடப்பு செய்தது.

.

திமுக ஆட்சி அமைந்தால், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிருந்தது. அதன்படி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :