• JUST IN | சுட சுட

கையில் குழந்தையுடன் நயன்தாரா: வைரல் புகைப்படம்!





நடிகை நயன்தாரா தன் கையில் குழந்தையுடன் நின்றிருக்க அருகில் விக்னேஷ் சிவன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது நயன்தாரா ‘’காத்துவாக்குல ரெண்டு காதல்’’, ‘’அண்ணாத்த’’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நயன்தாரா தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கையில் ஒரு குழந்தையுடன் நயன்தாரா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நயன்தாராவின் அருகில் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

ஆா்.நாகராஜன் says :

பெண்களுக்கான பத்திாிகையில் முதலிடம் வகிப்பது மங்கையா்மலா் அதில் இது போன்ற செய்(தீ)திகள் வேண்டாமே

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :