• JUST IN | சுட சுட

அமிதாப்பின் பாடிகார்டுக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்?





பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தனிக்காவலராக பணியாற்றை வந்த மும்பை போலீஸ் அதிகாரி ஜிதேந்திரா ஷிண்டே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதித்ததாக எழுந்த புகார்களையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்துள்ளது மும்பை போலீஸ்.

அமிதாப் பச்சனின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த ஜிதேந்திரா ஷிண்டே மீது அளவுக்கு முறைகேடாக சம்பாதித்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மும்பை போலீஸ்! அங்கு கான்ஸ்டபிள் ஆன ஷிண்டே பல ஆண்டுகளாக அமிதாபுக்கு பாடிகார்டாக இருந்து வந்துள்ளார். காவல்துறை விதிகளின் படி 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நபர் தொடர்ந்து எந்த விஐபி-க்கும் தனிக்காவலராக பணீயாற்றக் கூடாது. ஆனால் ஷிண்டே 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார் இந்நிலையில் ஷிண்டே ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பாதிப்பதாக செய்திகள் வெளியாகின. இவர் அமிதாப்பச்சனிடமிருந்து இந்த சம்பளம் பெற்றாரா, அல்லது வேறு வகைகளில் இவர் சம்பாதித்தாரா என்பதை மும்பை போலீஸ் தற்போது விசாரித்து வருகிறது.

ஆனால் ஷிண்டே இதுகுறித்து தெரிவித்ததாவது:

தானும் தன் மனைவியும் சேர்ந்து ஒரு செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் மூலம் மும்பை பிரபலங்களுக்கு பாதுகாப்புப் பணிவிடை செய்து வருவதாகவும் கூறியுள்ளார், ஆனால் அமிதாப் தனக்கு ரூ.1.5 கோடி தரவில்லை என்பதையும் அவர் போலீஸிடம் தெரிவித்தார். பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு எக்ஸ் வகை பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :