• JUST IN | சுட சுட

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: முதல்வருக்கு மைத்ரேயன் கோரிக்கை!





தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, 90% விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்த ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. இந்த விஷயத்தில்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இவ்வாறு மைத்ரேயன் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கச் செய்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் சரியாக 100 நாட்களில் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுநாள் வருகிறது. அதற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன் என்று அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :