• TRENDING | பர பர

கசடதபற! சினிமா விமரிசனம்!


-ராகவ் குமார்.





உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் வேறு எதாவது ஒரு காரணமோ அல்லது பல காரணங்களோ இருக்கும் என்ற வண்ணத்துபூச்சி தத்துவத்தை கொண்டு கசடதபற படத்தை இயக்கி உள்ளார் டைரக்டர் சிம்பு தேவன்.

இது அந்தாலஜி வகை திரைப் ப ட வகையை சேர்ந்தது. பல்வேறு தனித்தனி கதைகளை காட்டி விட்டு அக்கதைகளை ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கக் கூடிய இவ்வகை கதைக்களம் தமிழுக்கு புதிது! ஆதரவு அற்ற பிரேம்ஜி, மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ரெஜினாவை காதலிக்கிறார். ரெஜினா வீட்டின் எதிர்ப்பை தாண்டி பிரேம்ஜியை திருமணம் செய்ய முடிவெடுக்கும் சூழலில், நகையை திருடி விட்டதாக காவல் துறை பிரேம்ஜியை கைது செய்கிறது.

தாதா சம்பத் தன் மகன் சாந்தனு மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். மகன் தன்னை போல உருவாகக் கூடாது என்பதற்காக மேல் நாட்டில் தங்கி படிக்க வைக்க முயற்சி எடுகிறார்.எதிர்பாராத விதமாக சம்பத் சுட்டு கொல்லப் படுகிறார்.

இதேபோல கிராமத்து குழந்தைகளுக்கு வெங்கட் பிரபு தந்த மருந்தால், அவர்கள் இறந்தனர் என தவறாக வழக்கு ஜோடிக்கப்பட்டு தூக்கு மேடை முன்பு நிறுத்த படுகிறார். வெங்கட் பிரபு என்ன ஆனார்?

ஒவ்வொரு கதை முடிவிலும் போட்ட முடிச்சுகளை டைரக்டர் ஒரு புள்ளியில் அவிழ்கிறார். எங்கேயும் பிசிறு இல்லாமல் திரைக்கதையை நகர்த்தி சென்றதற்கு சிம்பு தேவனக்கு ஒரு சபாஷ் போடலாம்.இருந்தாலும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்க்கான பரபரப்பு திரைக்கதையில் குறைவுதான்.பாலசுப்பிரமணியம்,ஆர் டி ராஜசேகர், விஜய்மில்டன் போன்றவர்களின் ஒளிப்பதிவுகள் படத்தை தரத்தை உயர்த்துகிறது.யுவன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் பின்னணி இசைகள் கதைக்கு வலு சேர்க்கிறது. இது போன்ற கதைகளுக்கு எடிட்டர் பணி முக்கியம் என்பதை உணர்ந்து காசி விஸ்வநாதன் உட்பட அனைத்து எடிட்டர்களும் உழைத்து இருக்குறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இந்த புதிய முயற்சிக்காக இயக்குனரை பாராட்டலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :