• TRENDING | பர பர

இந்திய ஐ லீக் கால்பந்து தொடர்: இன்பன் உதயநிதி தேர்வு!





தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரன் இன்பன் உதயநிதி இந்திய ஐ லீக் கால்பந்து தொடரில் விளையாடத் தேர்வாகியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பேரனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி. சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இவர் டிபெண்டர் ரோலில் பயிற்சி செய்கிறார். தற்போது இவரை ஒரு கால்பந்து கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியளவில் பிரபலமான ஐ லீக் தொடர் 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் 21 கிளப் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தாண்டுக்கான தொடர் ஆரம்பமாகவிருப்பதால் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளில் கிளப் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணி, தங்கள் கிளப் சார்பாக விளையாட இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெரோகா அணி பதிவிட்டுள்ளது. இந்த கிளப்பின் தலைமையிடம் மணிப்பூர் மாநிலத்தில் குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :