• JUST IN | சுட சுட

#Breaking: மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் இன்று பதவியேற்பு!





நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் இன்று பதவி ஏற்றார்.

தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76) தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் பதவி வகித்தவர். மேலும் பாஜக தேசிய குழு உறுப்பினராக இருந்தார்.

சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல. கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்வதாக கடந்த வாரம் குடியரசுத் தலைவர் ராம்ம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இல. கணேசன் பாஜக-வில் தான் வகித்து வந்த தேசிய குழு உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.

இந்நிலையில் இன்று அதிகாரபூர்வமாக மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :