• JUST IN | சுட சுட

#BREAKING: 7.5% உள்ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!





தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் தற்போதைய திமுக அரசும் தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க ஸ்டாலின் அதற்கான சட்ட முன்வடிவை முன்மொழிந்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்தார்.

.

இந்த நிலையில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், கால்நடை, மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட படிப்புகளில் உள்ஒதுக்கீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது..

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :