• JUST IN | சுட சுட

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் கவனம் அவசியம்: சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை!





தமிழகத்தை கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனா முற்றிலுமாக நீங்கவில்லை. நேற்று ஒரேநாளில் 1,573 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 5ஆயிரத்து 647ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 34 ஆயிரத்து 788 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் கட்டுப்பாட்டுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நோய் சென்றுவிட்டது என்று நினைக்காமல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். சில இடங்களில் அதாவது தேனீர் கடைகள் ,ஹோட்டல்களில் 100% இருக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர், அதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம், உணவு அருந்தும் நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த பத்து நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு கொரோனா அதிகரித்துள்ளது. அதேபோல் நம்மூரிலும் பண்டிகை காலங்களீல் அதிகரிக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசு அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரம் கொடுத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதை தீவிரப்படுத்த உள்ளோம். அதேபோல் எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் வழக்கமாக செல்லக்கூடியவர்கள் 100% தடுப்பூசி போடுவதற்கு அந்தந்த மாவட்டங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

-இவ்வாறு சுகாதரத்துறை செயலர் கூறினார்.

Comments

ஆா்.நாகராஜன் says :

ஊரடங்கை யாரும் மதிக்கவில்லை சமுக இடைவெளியையாரும் கடைபிடிக்க வில்லை மீன் கறி வாங்க கூட்டம் அலைமோதுகிறது யாரையும் மதிக்காமல் கரோனா பற்றி கவலையில்லாமல் சமுக பற்று சமுதாய நலன் விக்ஷயங்களில் அக்கறை காட்டாத சில அதிமேதாவி மாஸ்க் அணியா மர மண்டைகள் ஊாில் உலா வரும்போது எப்படி கொரோனா விலகும் ஆா்.நாகராஜன் செம்பனாா்கோவில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :