• SPARKLES | மினுமினு

ரூ.87-க்கு இத்தாலியில் வீடுகள் விற்பனை!


- சாந்தி கார்த்திகேயன்





இத்தாலியில் வெறும் ரூ.87 க்கு ஒரு வீடு வாங்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனால் அது உண்மை! இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மென்சா நகரில் ஒரு யூரோ பணத்துக்கு - அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.87-க்கு வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

1968-ம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற தொடங்கினர். இதனால் மென்சோ நகரத்தின் மக்கள் தொகை பெரியளவில் குறைந்தது. இதையடுத்து முன்பு போலவே இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிக அளவில் குடியேற வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் வீடுகளை இத்தாலி அரசு விற்பனை செய்கிறது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளதாவது:

மென்சோ நகரில் காலியாக உள்ள வீடுகள் சிலவற்றை தலா ரூ.87 என்ற விலையில் விறபனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வீடுகளை வாங்க விரும்புபவர்கள் இம்மாதம் 28-ம் தேதிக்குள் விண்னப்பிக்க வேண்டும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் முடிவை பொறுத்து காலியாக இருக்கும் ஏராளமான வீடுகள் அடுத்தடுத்து ஏலம் விடப்படும்.

-இவ்வாறு அந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :