• TRENDING | பர பர

மும்பை-டு-குஜராத்: வெறும் காலுடன் ஓடிய பாலிவுட் நடிகர்!





மிலிந்த் சோமன். பாலிவுட்டின் பிரபல நடிகரும் புகழ்பெற்ற மாடலுமான மிலிந்த் சோமன் சமீபத்தில் மும்பையிலிருந்து குஜராத் வரை வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்துள்ளார். இவர் தமிழில் `பச்சைக்கிளி முத்துச்சரம்`, `பையா`, `வித்தகன்`, `அலெக்ஸ் பாண்டியன்` உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

`ஃபிட் இந்தியா` என்னும் ஆரோக்கியமான இந்தியா திட்டத்தைத் பிரதமர் மோடி தொடங்கி உள்ளார். இந்தத் திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக மிலிந்த் சோமன் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் இருந்து வெறும் காலுடன் ஓட்டத்தைத் துவக்கினார். அவர் தினமும் 60 கிமீ வரை வெறும் காலுடன் ஓடி, 416 கிமீ தூரத்தில் குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை வளாகத்தை 8 நாட்களில் அடைந்து சாதனை புரிந்துள்ளார்.

நடிகர் மிலிந்த் சோமன் ஒரு மராத்தான் பந்தய வீரர் ஆவார். பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். மிலிந்த் சோமன் மனைவி அங்கீதாவும் அவருடன் ஓடி உள்ளார். அவர் தினசரி 28 கிமீ தூரம் ஓடி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :