• JUST IN | சுட சுட

#BREAKING: அமைச்சர் பொன்முடியின் மகன் உடல்நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் அனுமதி!





தமிழக அமைச்சர் பொன்முடியின் மகனும் திமுக எம்.பி-யுமான கவுதம் சிகாமணி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்.பி-யுமான கவுதம சிகாமணி ஒரு மருத்துவர் ஆவார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார்.

இந்நிலையில், கவுதம் சிகாமணிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்லது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :