• JUST IN | சுட சுட

உலகின் மிகப் பெரிய ராட்டினம்: அக்டோபர் 21-ம் தேதி துபாயில் திறப்பு!





துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு வாட்டர்ஸ் தீவில் உலகிலேயே மிகப் பெரிதான பிரம்மாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஐன் துபாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் 250 மீட்டர் உயரம் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. லண்டனிலுள்ள லண்டன் ஐ ராட்டினத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டது. இந்நிலையில் இந்த ராட்டினம் அக்டோபர் 21-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து துபாய் அரசு வெளீயிட்டுள்ள தகவல்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு உலகிலேயே பெரியதும் உயரமானதுமான இந்த ராட்டினம் அக்டோபர் 21-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த ராட்டினத்தில் ஒரு முழு சுற்று வர 38 நிமிடங்கள் ஆகும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :