• JUST IN | சுட சுட

கையில் துப்பாக்கியுடன் வீடியோ: பெண் போலீஸ் சஸ்பெண்ட்!





உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன் கையில் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகியதைத் தொடர்ந்து அந்த பெண் கான்ஸ்டபிள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அந்த பெண் போலீஸ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் துப்பாக்கி உயிர்களை காப்பதற்கான ஆயுதம்.. போஸ் கொடுக்க அல்ல என்று எச்சரித்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :