• GLITTERS | பளபள

ரூ.6 லட்சம் கோடி மதிப்பில் தேசிய பணமாக்கல் திட்டம்!


-ரமேஷ் சுந்தரராஜன்





மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முந்தினம் (ஆகஸ்ட் 23) ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline - NMP) வெளியிட்டார். இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பும் அதரவுகளூம் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் சொத்துகளை குத்தகைக்கு விடுவது ஏற்புடையது அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் சாராம்சம் என்ன?

மத்த்ய அரசுக்கு சொந்தமான பயணிகள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் முதல் விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் வரை உள்கட்டமைப்புத் துறைகளில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சொத்துக்களை தனியாருக்கு சில வருட காலத்துக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பணமாக்கல் திட்டத்தை, மத்திய அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது. இந்த திட்டத்தின் கீழ்,சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பயன்படுத்தப்படாமல் இருக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் சொத்துக்களை பணமாக்குவதன் மூலம், அரசுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் திட்டம் இது என மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை கூறியுள்ளது.

இதில் ரயில்வேயைப் பொறுத்தவரை மொத்தம் 400 நிலையங்கள், 90 பயணிகள் ரயில்கள், ரயில்வே ஸ்டேடியங்கள் மற்றும் காலனிகள் மற்றும் கொங்கன் மற்றும் மலை துறை ஆகியவை ரயில்வே துறையில் பணமாக்குதலுக்காக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மொத்த சொத்து மதிப்பில் சுமார் 26% பங்களிப்பு செய்யும் என்று சொல்லப்படுகிறது.

மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டு வரையிலஃஅன 4 ஆண்டுகளில் ரூ 1.60 லட்சம் கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை சொத்துக்கள் பணமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று. நிதி ஆயோக் தயாரித்த ஆவணத்தின்படி, நகர்ப்புற ரியல் எஸ்டேட் சொத்துகள் மூலம் 2022-25 நிதியாண்டுகளில் சுமார் ரூ .15,000 கோடி நிதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

போக்குவரத்து துறையில், 12,828 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ .6 லட்சம் கோடி தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் பணமாக்கப்படும்.

மத்திய அரசின் இந்த பணமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டின் 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 6 விமான நிலையங்கள், 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவை உள்கட்டமைப்பு சொத்துக்களாக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது .

என்.எல்.சி இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன், காவிரிப் படுகையில் எரிவாயு குழாய்கள், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் சில துறைமுக சொத்துக்கள், புதுச்சேரி மற்றும் சென்னை ரயில் நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள அசோக் ஹோட்டல் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்தி குத்தகைக்கு விட மத்திய அரசு முயற்சிக்கிறது.

‘’இந்த சொத்துகளின் உரிமைகள் அனைத்து மத்திய அரசாங்கத்திடமே இருக்கும். இவற்றை தனியாருக்கு குறிப்பிட காலம் வரை குத்தகைக்கு மட்டுமே விடப்படுகின்றன. அப்படி குத்தகை காலம் முடிந்தவுடன், அந்த சொத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும்’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Comments

ஆா்.நாகராஜன் says :

தனியாா் மயமாக்க பிள்ளையாா் சுழி போடப்பட்டுள்ளதோ என பாமரன் அச்சப்படுகிறான் இன்னும் 30மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது இந்த நேரத்தில் அச்சம் ஏற்படுகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :