• JUST IN | சுட சுட

புதுச்சேரி துணை சபாநாயகராக ராஜவேலு தேர்வு!





புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை நாளை துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறும் எனவும், இன்று வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு துணை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.காப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், ராஜவேலு போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக ராஜவேலு நாளை பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :