• JUST IN | சுட சுட

வண்டலூர் உயிரியல் பூங்கா: இன்றுமுதல் மீண்டும் திறப்பு!





தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்த்ய நிலையில் மே மாதம் முழ ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா தக்கம் குறையத் தொடங்கிய நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப் பட்டன. ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களீல் தளர்வுகள் அறீவிக்கப் படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் பார்வையாளர்களூக்காக திறக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சென்னை - கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் - குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவையும் இன்று திறக்கப்படுகின்றன. பார்வையாளர்கள், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :