• JUST IN | சுட சுட

என் மீதான குற்றச்சாட்டு அபாண்டம்: பாஜக மாநிலப் புதுச்செயலாளர் கே.டி.ராகவன் அறிவிப்பு!





தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர்களில் ஒருவரான கே.டி.ராகவன், தனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான கே.டி.ராகவன் தொடர்பான வில்லங்கமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதையடுத்து, பாஜகவில் தன் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி.ராகவன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கே.டி.ராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்ட பதிவு:

தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். என் மீதான அபாண்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். அதை சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்.

-இவ்வாறு கே.டி.ராகவன் பதிவிட்டுள்ளார்.

Comments

ஆா்.நாகராஜன் says :

இது வரையில் பிரச்சனை இல்லை என்றாலும் கரும்புள்ளி விழுந்து விட்டது, நம்ப முடியவில்லை , நம்பாமலும் ,இருக்க முடியவில்லை , தேவையில்லாத நிகழ்வு .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :