• JUST IN | சுட சுட

#BREAKING: நடிகர் விவேக் மரணம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை!





நடிகர் விவேக் மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாக தான் காலமானார் என்று சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது. ஆனால், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாகவே உயிரிழந்தாரா என்பது தொடர்பான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவரது மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டு, அந்த பதில் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.

Comments

ஆா்.நாகராஜன் says :

நல்ல மனித நேய பண்பாளா் கலைவானா் என் எஸ் கிருஷ்னனை தொடா்ந்து புரட்சிகரமான கருத்துக்களுக்கு வித்திட்டவா் வெறும் விசாரணையோடு நில்லாமல் தெளிவான விபரம் வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :