• தினம் ஒரு நவதானிய உணவு

வரகு அரிசி காளான் பிரியாணி


ஜெயா சம்பத், கொரட்டூர்.

தேவையானவை:

வரகு அரிசி -கால் கிலோ,

காளான் -100கிராம்,

வெங்காயம் -1,

தக்காளி -1,

தயிர் -2ஸ்பூன்,

பச்சை மிளகாய் -2,

கரம் மசாலா -2ஸ்பூன்,

இஞ்சி பூண்டு விழுது, பட்டை, சோம்பு, இலவங்கம், புதினா, கொத்துமல்லி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப.

செய்முறை:

வரகரிசி, காளானைக் கழுவி வைக்கவும். வெங்காயம், தக்காளி, புதினா, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, இலவங்கம் போட்டுத் தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதோடு காளான், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தயிர் சேர்த்து நன்கு கிளறவும். பின் கழுவி வைத்துள்ள வரகுஅரிசியுடன், சம அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். சத்தான இந்தக் காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும். செய்து பாருங்கள்!

Comments

VaniGanapathy says :

வரகு சிறு தானியம் தான். நவ தான் யத்தில் வரகு வருமா..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :