• தினம் ஒரு நவதானிய உணவு

கொள்ளு கார உருண்டை


வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

தேவையானவை:

1. கொள்ளு - 1/4 கிலோ

2. வர மிளகாய்-5

3. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி- சிறிது

4. உப்பு - தேவையான அளவு

5. கொண்டை கடலை- 100 கிராம்

6. பெருங்காயம்- சிறிது

7. மஞ்சள் தூள்- சிறிது

8. தாளிக்க- எண்ணெய்,கடுகு,மற்றும் உளுந்து தேவையான அளவு

9. தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கொள்ளை லேசாக வாசனை வரும்வரை வறுத்து, தோல் நீக்கி ஊறவிடவும். அத்துடன் கொண்டை கடலையையும் சேர்த்து ஊறவிட்டு கரகரப்பாக வரமிளகாய் சேர்த்து அரைத்து எடுக்கவும் வாணலியில் கடுகு மற்றும் உளுந்து தாளித்து அரைத்த கலவையில் சேர்க்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம், கொத்த மல்லி சேர்க்கவும், சிறு சிறு உருண்டைகளாக (சீடை அளவில்) உருட்டி ஆவியில் வேகவிட்டு ருசிக்கவும், மாலையில் எளிய முறையில் செய்யக்கூடிய சிற்றுண்டி. வயதானவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். சிறார்களுக்கு வேகவிட்ட உருண்டைகளை எண்ணெயில் பொறித்துக் கொடுக்கலாம், மிகவும் ருசியாக இருக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :