• தினம் ஒரு நவதானிய உணவு

வேர்கடலை லட்டு


சுந்தரி காந்தி பூந்தமல்லி

தேவையானவை:

வேர்கடலை - 200கி

ஆளி விதைப்பொடி - 20 கி

நாட்டுச் சர்க்கரை - 100கி

சுக்குப்பொடி - 5 கி

ஏலக்காய் பொடி - சிறிது

செய்முறை:

வேர்க்கடலையை வறுத்து தோல் சுத்தம் செய்து பொடித்து வைக்கவும். ஆளி விதையை வறுத்து பொடிக்கவும். வேர்க்கடலைப் பொடி, ஆளி விதைப்பொடி, நாட்டு சர்க்கரை, சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி ஆகிய எல்லாவற்றையும் மிக்ஸில் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்கவும். பின்னர் அதை சிறு லட்டுகளாக பிடிக்கவும்.

பல் வளராத பாப்பாமுதல் பல் போன தாத்தாவரை இதனை விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம். இரு வாரம் வரை கெட்டு போகாது. ஆளி விதைப்பொடி சேர்க்காமலும் செய்யலாம்.

Comments

T. Kavitha Thamaraiselvan says :

Nice, very simple lattu..

Bharathy Ghandhi says :

Healthy laddu.. high in folic acid.. good for pregnancy

S A PERUMAL says :

அருனம யான மிகவும் எளியஉணவு.. வாழ்த்துகள்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :