• தினம் ஒரு நவதானிய உணவு

நவதானிய அடை


மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

தேவையானவை:

சாமை,வரகு,உடைத்த கம்பு,குதிரைவாலி, சிகப்பு அரிசி, முளை கட்டிய ராகி,தினைஅரிசி, வெள்ளை சோளம் -தலா ஒரு கப்,கொள்ளு-ஒரு கைப்பிடி,துவரம்பருப்பு, கடலைப்பருப்பு பாசிப்பருப்பு-மூன்றும் சேர்த்து -2 கப்,

உப்பு - தேவைக்கு,

வரமிளகாய்-6,

சோம்பு-2 டீஸ்பூன்,

வெங்காயம்-1கப்,

கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

எண்ணெய், வெண்ணெய்- தேவைக்கேற்ப.

தேங்காய் துருவல்-தேவைக்கு.

செய்முறை:

தானியங்களை தனியாகவும் பருப்புகளை தனியாகவும் கழுவி ஊறவிடவும்.பின் இரண்டையும் தனியாக கொரகொரப்பாக அரைத்து பின் உப்பு,மிளகாய்த்தூள், அரிந்த வெங்காயம், கருவேப்பிலை, தேங்காய் துருவல், சோம்பு பொடி,போட்டு நன்கு கலக்கவும். இதோடு கடுகு,உ பருப்பு, பெருங்காயம் தாளித்து கொட்டி நன்கு கலந்து வைக்கவும். அரைமணிநேரம் கழித்து சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். அடை நன்கு வெந்து மொறுமொறுப்பானதும் மறுபுறம் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுக்கவும். வெண்ணெயுடன் பரிமாறவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :