• தினம் ஒரு நவதானிய உணவு

முளைகட்டிய நவதானிய சூப்


கே.எஸ். கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவையானவை:

பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, கருப்பு உளுந்து

கொள்ளு, தட்டைப்பயறு போன்ற தானியங்களை நீரில் ஊற வைத்து (8 மணி நேரம்) முளை கட்டிக்கொள்ளவும்.

வெங்காயம்-1

பூண்டு - 2 பல்

சீரகம் – ½ ஸ்பூன்

தனியா – 1 ஸ்பூன்

மிளகு – ½ ஸ்பூன்

கொத்தமல்லிதழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சைச்சாறு - 2 ஸ்பூன்

தேங்காய்பால் - 1 கப்

செய்முறை:

முளைகட்டிய பயறுகள் ஒரு கப் எடுத்து குக்கரில் தேவையான அளவு நீர் சேர்த்து உப்பு போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். சூப்பிற்கு தேவையான வெங்காயம், பூண்டு ,சீரகம் ,தனியா, மிளகு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு கடைசியாக சிறிதளவு வேகவைத்த பயறையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதனுடன் மீதமுள்ள வேகவைத்த பயறையும் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கொதிக்கவிடவும். 2 நிமிடம் கழித்து தேங்காய் பால் ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிது சேர்த்து இறக்கிவிடவும் .2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சூடாக இந்த முளைக்கட்டிய பயறு சூப்பை பரிமாற அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த சத்து மிகுந்த முளைக்கட்டிய நவதானிய சூப்பை பருகுவதால்.

உடல் பருமன் குறையும். மூட்டு வலி குறையும்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :