• தினம் ஒரு நவதானிய உணவு

பாசிப்பயறு புட்டு


வாணி கணபதி, பள்ளிக்கரணை.

தேவையானவை:

பாசிப்பயறு -1 கப்

வெல்லத் தூள் - 3/4. கப்

ஏலக்காய்தூள் -1/4 ஸ்பூன்.

தேங்காய்த் துருவல் – ¼ கப்

முந்திரி - 5

செய்முறை:

பாசிப்பயறை நன்கு ஊற வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து மிக்ஸியில் கொஞ்சம் கரகரப்பாக சிறிது உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். பிறகு இட்லி தட்டில் ஊற்றி இட்லியாக வேக விட்டு எடுக்கவும் ( இட்லி வேகும் நேரம்தான்).சிறிது சூடு இருக்கும்போதே நன்கு உதிர்த்து விட்டு நெய் கலந்து உதிர்க்க வே‌ண்டு‌ம். அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்தூள். தேங்காய்த் துருவல், வெல்லத்தூள, வறுத்த முந்திரிப் பருப்பை சேர்த்து கலந்து விட்டால் சுவையான சத்தான புட்டு தயார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் நல்லது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :