• தினம் ஒரு நவதானிய உணவு

கம்பு மாவு கருப்பட்டி முக்குழி பணியாரம்


ஜானகி பரந்தாமன், கோயம்புத்தூர்

தேவையானவை:

கம்பு மாவு - 2கப்

பொடித்த கருப்பட்டி -3கப்

துருவிய தேங்காய் - 1கப்

முந்திரி பருப்பு - தேவைக்கு

நெய் - 3 டேபிள் ஸ்பூன்.

ந,எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

கம்பு மாவை லேசாக வறுத்து இட்லி தட்டில் வேக வைக்கவும் . பஞ்சுமாவு பதத்திற்கு கரைக்கவும் பொடித்த கருப்பட்டியை மூழ்கும் வரை நீர் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சி (குறைந்த தீயில் ) வடிகட்டி மாவில் ஊற்றவும். அத்துடன் தேங்காய் துருவல், சீவிய முந்திரி பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்து போட்டு கலக்கவும். பணியார சட்டி குழியில் கால் பாகம் எண்ணெய் ஊற்றி முக்கால் பாகம் மாவு ஊற்றி ஒரளவு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து பரிமாறவும் சத்தான கம்பு கருப்பட்டி குழிப்பணியாரம் தயார்

குறிப்பு: மாவை ஒரு மணிநேரம் ஊறவைத்து செய்தால் மிருதுவாக இருக்கும். மேலும் வேக்காடு மிகவும் முக்கியம் மாவை குழி நிறைய ஊற்றக்கூடாது. வேக இடமில்லையின்றால் பணியாரம் கடினமாகிவிடும். இட்லிக்கும் இது பொருந்தும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :