• TRENDING | பர பர

ஆயுத பூஜையன்று `வலிமை` ரிலீஸ்? : ரசிகர்கள் கொண்டாட்டம்!





நடிகர் அஜித்தின் `வலிமை` படம் ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருக்கிறது என்ற செய்தி அஜீத் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் நடித்து வரும் `வலிமை` படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி, ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராகேஷ் கெளதமன் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது:

இந்த தீபாவளீக்கு `அண்ணாத்த` படம் ரிலீஸ் ஆகிறது. `கேஜிஎஃப்` படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. கும் ராஜமௌலியின் `ஆர்ஆர்ஆர்` படத்தின் வெளியீடும் அடுத்த ஆண்டு தள்ளிப் போகிறது. இந்நிலையில் அஜீத்தின் `வலிமை` படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14-ம் தேதி வெளியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

-இவ்வாறு அவர் பகிர்ந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :