• JUST IN | சுட சுட

திருவிழா நடத்த அனுமதியுங்க: கலெக்டர் அலுவலகத்தில் சாமியாடிய பெண்மணி!





சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண்மணி திடீரென ஆவேசம் வந்து சாமியாடியதால், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் தங்கள் ஊரில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது மனு கொடுக்க வந்தவர்களில் ஒரு பெண்மணிக்கு திடீரென ஆவேசம் வந்து சாமியாடத் தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின் ஆவேசம் தணிந்து இயல்பு நிலைக்கு மாறினார்.

சிவகங்கை நாலுகோட்டை கிராமத்தினர் கொடுத்த மனு விபரமாவது:

எங்கள் நாலுகோட்டை கிராமம் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு விருதுகளை பெற்றுள்ளது.இங்கு ஸ்ரீஅதிகுந்தவரத அய்யனார், காளி, கருப்பையா கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் புரவி எடுப்புவிழா பன்னெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டும் கொரோனா விதிமுறையை பின்பற்றி திருவிழா நடத்த தயாராகி வருகிறோம். ஆனால் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக திருவிழாவை நடத்த விடாமல் சிலர் தடுத்து மிரட்டுன்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கிராம தெய்வம், குல தெய்வத்திற்கு புரவி எடுப்பு விழா நடத்த அரசு விதிமுறைப்படி அனுமதி அளிக்க வேண்டும்.

-இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மனு கொடுக்க வந்த இடத்தில் அந்த பெண்மணி சாமியாடிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :