• TRENDING | பர பர

மகாராஷ்டிராவில் சாலையைக் கடந்த புலிகள்: வைரல் வீடியோ!





மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் சாலையில் இரவில் 2 புலிகள் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்தில் டிவிட்டரில் பகிர்ந்த வீடியோ ஒன்று வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் இரவு நேரத்தில் 2 புலிகள் காஷூவலாக நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றன. இக்காட்சி மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் சாலையில் கடந்த 19-ம் தேதி அன்று எடுக்கப்பட்டதாக வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எங்கள் XUV கார்கள் மட்டும் நெடுஞ்சாலையில் பெரும் பூனை அல்ல. அற்புதம்` என ஆனந்த் மஹிந்திரா அந்த விடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது நெட்டிசன்களால் பெருமளவு விரும்பிப் பார்க்கப் பட்டு வருகிறது.

Twitter : https://twitter.com/i/status/1429426168038674438

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :