• JUST IN | சுட சுட

உத்தவ் தாக்கரேக்கு ஒரு அறை கொடுத்திருப்பேன்: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!





மகாராஷ்டிராவில் சுதந்திர தினவிழா உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என்பதுகூட முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு தெரியவில்லை. நான் அங்கு இருக்க நேர்ந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்

என மத்திய அமைச்சர் நாராயன் ரானே கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் `மக்கள் ஆசி யாத்திரை` நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நாராயன் ரானே கலந்துகொண்டு பேசியதாவது:

நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்பதுகூட மாநில முதல்வருக்கு தெரியாதது பெருத்த அவமானம். அவர் சுதந்திர தினவிழா உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டி, அருகிலிருந்த தன் உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அந்த இடத்தில் அப்போது நான் இருந்திருந்தால், உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு அறை கொடுத்திருப்பேன்.

-இவ்வாறு மத்திய அமைச்சர் நாராயன் ரானே பேசினார். இக்கருத்து மகாராஷ்டிராவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

ரூம் போட்டு தரேன்.. நல்லா யோசிங்க ங்கர அர்த்தத்தில் " ரூம்-அறை "னு சொல்லியிருப்பாருங்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :