• JUST IN | சுட சுட

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!





தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கலைஞரின் சாதனைகள், சிந்தனைகளை விளக்கும் வகையில் நவீன விளக்கப் படங்களுடன் மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாந்திக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதாவது:

இந்திய அரசியலை வழிநடத்திய கலைஞர், தொடர்ந்து 13 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தோல்வி அவரை தொட்டதே இல்லை; வெற்றி அவரை விட்டதே இல்லை. 5 முறை முதல்வராக பதவி வகித்தவர். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர்.

-இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :