• TRENDING | பர பர

ரோலிங் ஸ்டோன் புத்தக அட்டைப் படத்தில் ‘எஞ்சாய் எஞ்சாமி’ டீம்!





சர்வதேச இசை இதழான ரோலிங் ஸ்டோன் இதழின் இந்திய பதிப்பின், ஆகஸ்ட் மாத அட்டைப் படத்தில் `எஞ்சாய் எஞ்சாமி` மற்றும்’’ நீயா ஒளி’’ பாடல்களளைப் பாடியவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

‘எஞ்சாய் எஞ்சாமி’ மற்றும் ‘நீயா ஒளி’ பாடல்கள் யூ-டியுபில் பல் மில்லியன் வியூவர்ஸைத் தண்டி சரித்திரம் படைத்தது. இந்த பாடல்களின் சர்வதேச சாதனைகளை பாராட்டும் வகையில் பாடகி தீ (எஞ்சாய் எஞ்சாமி) மற்றும் ஷான் வின்செண்ட் டீ பால் (நீயா ஒளி) ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ‘எஞ்சாய் எஞ்சாமி’ பாடலில் தீ-யுடன் இணைந்து பாடிய பாடலாசிரியர் தெருக்குரல் அறிவின் படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டைப்படத்தில் இடம்பெறவில்லை. அவரது புகைப்படம் இடம்பெறாததற்கு இயக்குனர் பா. ரஞ்சித் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு பாடல்களின் பாடலாசிரியரும், ’’எஞ்சாய் எஞ்சாமி’’ பாடலின் பாடகர்களில் ஒருவருமான தெருக்குரல் அறிவின் படம் அதில் இடம் பெறவில்லை. அவரது படம் ரோலிங் ஸ்டோன் இதழின் அட்டை படத்தில் இடம் பெறாததற்கான காரணம் புரியவில்லை என இயக்குனர் பா.ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :