• TRENDING | பர பர

2.5 கிலோ தங்க நகைகளால் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவப் படம்!





கேரளாவில் சுரேஷ் என்கிற ஓவியர் ஒருவர், இரண்டரை கிலோ அளவிலான தங்க நகைகளைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல்கலாம் உருவத்தை உருவாக்கியுள்ளார். இந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்துல் கலாம் உருவப் படத்தை உருவாக்குவதற்காக ஓவியர் சுரேஷ் ஒரு நகைக்கடையில் உள்ள செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 2.5 கிலோ தங்க நகைகளை பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். அச்சுஅசல் அப்துல் கலாம் தோற்றத்தை துல்லியமாக உருவாக்கிய இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த உருவப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓவியர் சுரேஷ், இதற்கு முன்பாக நடிகர்கள் மம்முட்டி, பிரித்விராஜ், மோகன்லால் போன்ற நடிகர்களின் உருவப்படத்தையும் பேப்பர், மரத்துண்டுகள், பாத்திரங்கள், பூக்கள் மற்றும் புற்கள், காய்கறிகள் என்று பல வகையான பொருட்களை பயன்படுத்தி உருவாக்கியுள்ளார் என்பது குறீப்பிடத் தக்கது. இதுவரை இவர் 60-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை இவ்வாறு வித்தியாசமாக உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :