• தினம் ஒரு வெரைட்டி தோசை

மிக்சட் வெஜிடபிள் தோசை


சுந்தரி காந்தி, பூந்தமல்லி

தேவையானவை:

இட்லி அரிசி – 800 கிராம்

உளுந்து – 200 கிராம்

பீட்ரூட்- 25 கிராம்

கேரட் – 25 கிராம்

பீன்ஸ் – 25 கிராம்

கோஸ்- 25 கிராம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் – 1

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

பெருங்காயம் - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

இட்லிஅரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைththu அரிசியை கொரகொரப்பாகவும் பின்னர் உளுந்தை பொங்கும் வரை மையாக அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டையும் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

பொடியாக நறுக்கிய அல்லது துருவிய காய்கறிகளை குக்கரில் ஒரு விசில் வேக விடவும். ஒரு வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய் ,பெருங்காயம் மற்றும் வேக வைத்த காய் சேர்த்து வதக்கி, இந்த காய்கறி கலவையை இட்லி மாவில் சேர்த்து கலக்கவும்.

தோசை தவாவில் காய் கலந்த மாவை ஊற்றி இருபுறம் வேக வைக்கவும். தோசை தயாரானதும் சூடாக பரிமாறவும். இதற்கு சைட் டிஷ் தேவைப் படாது. வண்ணமயமான சத்தான இந்த தோசை செய்து குழந்தைகளை குஷிப்படுத்தலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :