• தினம் ஒரு வெரைட்டி தோசை

அழகர் தோசை


நளினி சுந்தரராஜன், பள்ளிக்கரணை

தேவையானவை:

புளிக்காத தோசைமாவு-3 கப்

தயிர்-அரை கப்

சுக்குப்பொடி-1ஸ்பூன்

உப்பு-தேவைக்கு

பச்சை மிளகாய்-2

இஞ்சி-சிறு துண்டு

மிளகு-பொடித்தது 1ஸ்பூன்

சீரகம்-1ஸ்பூன்

க.பருப்பு-1ஸ்பூன்

உ.பருப்பு-1ஸ்பூன்

பெருங்காயம்-கொஞ்சம்

கறிவேப்பிலை கொஞ்சம்

எண்ணெய்-தாளிக்க

செய்முறை:

பச்சைமிளகாய் மற்றும்இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.தோசைமாவுடன் தயிர் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், இஞ்சி,ப.மிளகாய்,கறிவேப்பிலை,

௧.பருப்பு,உ.பருப்பு சேர்த்து தாளிக்கவும். கடைசியாக மிளகு

பொடி சேர்த்து தாளித்து தோசை மாவில் கொட்டிக் கலக்கவும். தோசைக்கல் காய்ந்தவுடன்

கல்லில் மாவை விடவும் சுற்றி விடவும்.தோசை வெந்ததும் எடுக்கவும். "சுவையான "அழகர் தோசை"ரெடி.

Comments

MALAPALANIRAJ says :

அற்புதம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :