• தினம் ஒரு வெரைட்டி தோசை

இளந்தோசை


-என்.கோமதி, நெல்லை.

தேவையானவை:

புழுங்கரிசி – 2 கப்

துவரம் பருப்பு - ¼ கப்

உளுந்தம் பருப்பு - 1/4கப்

வெந்தயம் - ½ டீஸ்பூன்

எள் – 1 டீஸ்பூன்

உப்பு - திட்டமாக

நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:-

புழுங்கலரிசி,துவரம் பருப்பு, உளுந்து, வெந்தயம் நான்கையும்,மூன்று மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்து உப்புப் போட்டு, தோசைமாவு பதத்தில் கரைத்து வைக்கவும். எட்டு மணி நேரத்தில் பொங்கி விடும். வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு,வறுக்கவும். சடசடவென வெடித்ததும் மாவில் கொட்டிக் கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவை பரவலாக விட்டு, சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு மூடி வைத்து, தீயை மிதமாக்கவும். வெந்தவுடன் எடுத்து, தேங்காய் சட்னியுடன் சாப்பிட செம ருசி

(பி.கு தோசையை திருப்பி போட்டால் மிருதுத்தன்மை இருக்காது).

Comments

கிரிஜா ராகவன் says :

தோசை சிறிது கனமாகத்தான் இருக்கும் . லேசாக வார்ததால் முருது அதன் அமை இருக்காது

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :