• தினம் ஒரு வெரைட்டி தோசை

பழ தோசை


ஜெகதா நாராயணசாமி, சென்னை.

தேவையானவை:

இட்லி அரிசி – 2 கப்

வெண்புழுங்கலரிசி - 1கப்

பச்சரிசி - ½ கப்

முழு உளுந்து - 1/4கப்

வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்

மாம்பழ விழுது – 1 கப்

மாதுளை முத்துக்கள் - 1/4 கப்

கல்உப்பு - ருசிக்கு

நெய்- தேவையான அளவு

தண்ணீர் – ஊறவைக்க

அலங்கரிக்க:- மாம்பழ துண்டுகள்,மாதுளை முத்துக்கள்

செய்முறை:-

இட்லி அரிசி,வெண் புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை தேவையான தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மைய அரைத்து, உப்பு போட்டு புளிக்க வைக்கவும்.மறுநாள் மாவில் மாம்பழ விழுதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி சேர்த்துக் கொள்ளவும். மாதுளை விழுதுகளையும் சேர்த்து, தவாவில் நெய்விட்டு,உருகினதும் மாவை சற்று தடிமனாக கரண்டியால் ஊற்றி தேய்த்துக் மேலே மாம்பழத் துண்டுகள்,மாதுளம் பழத்தை வைத்து ஒருபக்கம் சிவக்க வெந்ததும் எடுத்து விடவும்.சுவையான,வித்தியாசமான பழ தோசை தயார்.

குறிப்பு:- தோசையை ஒருபக்கம் வேக வைத்தால் போதும். நெய் சேர்ப்பதால் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

Comments

MALAPALANIRAJ says :

சூப்பர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :