• தினம் ஒரு வெரைட்டி தோசை

பாவ்பாஜி தோசை (street style)


-கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தோசைக்கு 3 பங்கு அரிசி, 1 பங்கு உளுந்து ஊறப்போட்டு அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைத்து எடுக்க தோசை மாவு ரெடி. இனி பாவ்பாஜி தோசை செய்வதைப் பார்ப்போம்..

தேவையானவை:

தோசை மாவு - தேவையான அளவு

வெங்காயம்- 2

குடமிளகாய் - 1

தக்காளி - 2

வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃப்ளவர் - 1 கப்

டொமடோ சாஸ் –சிறிதளவு.

சில்லி சாஸ் – சிறிதளவு.

பாவ்பாஜி மசாலா பொடி

உப்பு - தேவையான அளவு

வெண்ணெய் - 1/2 கப்

அலங்கரிக்க: மேலே தூவ பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி

செய்முறை:

தோசைக் கல்லில் 2 கரண்டி மாவை விட்டு நன்றாக பரப்பி அடுப்பை சிம்மில் வைக்கவும் ஒரு கிண்ணத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன், குடமிளகாய் 1 ஸ்பூன், தக்காளி 2 ஸ்பூன், வேகவைத்த காய்கறி கலவை 2 ஸ்பூன், தக்காளி சாஸ், சில்லி சாஸ் தலா 2 ஸ்பூன், பாவ்பாஜி மசாலா பொடி 1 ஸ்பூன், சிறிது உப்பு, வெண்ணெய் 1 ஸ்பூன் போட்டு கலந்து மெதுவாக மசித்து விட்டுக் கொண்டு நன்கு கலக்கவும். பிறகு தோசையின்மேல் சீராக பரப்பவும். தோசை பொன்னிறமாக வெந்ததும் மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை தூவி மடித்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

சுவையான பாவ்பாஜி street style தோசை ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட ரசித்து சாப்பிடுவார்கள்.

Comments

MALAPALANIRAJ says :

உடம்புக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ள தோசை.இதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். தோழிக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :