• SPARKLES | மினுமினு

1 கிலோ ஸ்வீட் ரூ.9,000: அப்படி இதில் என்ன விசேஷம்?!


சுபஸ்தினி





வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப் படும். வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) இப்பண்டிகை கொண்டாடப் படவுள்ளது. அதை முன்னிட்டு குஜராத்திலுள்ள சூரத் நகரில் பிரபலமான ஒரு ஸ்வீட் கடையில் ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இனிப்பை தயாரிக்க, அதை மக்கள் போட்டி போட்டு கொண்டு வாங்குகின்றனர். இதை வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர்

வட இந்தியாவில் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது சகோதரிகள், தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி மிக விமர்சையாக கொண்டாடுவார்கள். இதனால் இப்பண்டிகை நாளன்று துனுசு தினுசாக இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும். இந்நிலையில் சூரத்தில் ஒரு கிலோ ஸ்வீட் 9 ஆயிரத்துக்கு விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. அப்படி என்ன அதில் ஸ்பெஷல்?!

லட்டு மாதிரியான அநத மோத்திசூர் இனிப்பில் சுற்றிலும் ஒரிஜினல் தங்க ரேக்குகள் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவ்வளவு காஸ்ட்லி விலை! ஒவ்வொரு இனிப்பிலும் 24 கேரட் தங்க ரேக்கு பூசப்பட்ட இனிப்பை கிலோ 9 ம் கொடுத்து மக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

’’சப்ளை செய்து கட்டுப்படி ஆக மாட்டேனென்கிறது..’’ என்று மகிழ்ச்சியுடன் சலித்து கொள்கிறார் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :